நடிகர் விஷ்ணு விஷால், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா இடையே உள்ள நட்பு பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் உலாவருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஜுவாலா கட்டா தொடங்கியுள்ள ஸ்போர்ட்ஸ் அகாதமிக்காக விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்.
இருவருமே விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நபர்கள் என்பதால் ஒரே பாதையில் பயணிக்கும் வகையில் இருவரும் நெருங்கிப் பழகிவருகின்றனர்.
விஷ்ணு விஷால் ஏற்கனவே தனது மனைவி ரஜினி நடராஜை பிரிந்த நிலையில், இதுவரை அவர் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர்களின் பிரிவுக்குக் காரணமாக அமைந்ததே ஜுவாலா கட்டாவுடன் நெருங்கிப் பழகியதே என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை ஜுவாலா கட்டாவுடன் கொண்டாடிய விஷ்ணு விஷால் அவருடன் மிக நெருங்கிப் பழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.