நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. அதன் பிறகு அவரின் எந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்கிடையே விஷ்ணு விஷாலுக்கும், அவரது மனைவி ரஜினிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வருவதாகவும், அதனால் தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருவதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து சமீபத்தில் விஷ்ணு விஷால், தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை ட்விட்டரில், அறிக்கையுடன் வெளியிட்டிருந்தார். அதில் 'தான் மது, மன உளைச்சல் மற்றும் தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால், பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரித்து விட்டதாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துவிட்டதாகவும்' தெரிவித்தார்.