நடிகர் விஷ்ணு விஷால், பணப்பிரச்சனை, விவாகரத்து, மது பழக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான FIR டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரெஜினா படத்தில் நடிக்கவிருக்கும் விஷ்ணு விஷால் - விஷ்ணு விஷாலின் புதிய படங்கள்
ரெஜினா நடிப்பில் உருவாகவுள்ள பெயரிடப்படாத படத்தில் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

Regina -Vishnu vishal
இதனைத் தொடர்ந்து ஜகஜால கில்லாடி, ஜெர்சி தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்தப் படத்தில் ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.