'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் 'முண்டாசுபட்டி', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ஜீவா', 'ராட்சசன்', 'நேற்று இன்று நாளை' உள்ளிட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தார்.
இவர் 2011ஆம் ஆண்டு தனது கல்லூரித் தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்ற மகன் உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் அறிவித்தார்.