தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எஃப்.ஐ.ஆர்' ட்ரெய்லர் வெளியீடு; மேடையில் கண்கலங்கிய விஷ்ணு விஷால்!

எஃப்.ஐ.ஆர் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், தனது தந்தையின் பேச்சைக் கேட்டு, நடிகர் விஷ்ணு விஷால் மேடையிலேயே கண் கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

விழா மேடையில் விஷ்ணு விஷால் கண் கலங்கியது தொடர்பான காணொலி
விழா மேடையில் விஷ்ணு விஷால் கண் கலங்கியது தொடர்பான காணொலி

By

Published : Feb 3, 2022, 4:28 PM IST

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’எஃப்.ஐ.ஆர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்ணா நகரில் உள்ள விஆர் மாலில் இன்று (பிப்.3) நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் பேசிய, விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, ஒரு தந்தையாக எனது மகனை இப்படி பார்ப்பது எனக்கு பெருமை என்றார்.

இதனைக் கேட்ட நடிகர் விஷ்ணு விஷால் மேடையிலேயே கண் கலங்கினார்.

எமோஷனலான விஷ்ணு விஷால்

அதனைத் தொடர்ந்து பேசிய விஷ்ணு விஷால், “என் அப்பாவிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச வேண்டாம் என சொல்லி இருந்தேன். அவர் பேசிய இரண்டு வரிகளில் நான் எமோஷனலாகி விட்டேன்.

நிறைய தோல்விகளை என்னுடைய வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். கிரிக்கெட் தொடங்கி, சினிமா வரை பல தோல்விகளைக் கடந்து வந்துள்ளேன்.

ராட்சசன் படம் வெளியான பிறகு, இந்தியா முழுவதும் இருந்து எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. அதனால் அடுத்த படங்களில் எனக்கு அதிக பொறுப்பு இருந்தது.

அந்தப் படங்களுக்குப் பிறகு நிறைய படங்கள் வெளியானது. அவை எல்லாம் ராட்சசன் படம் வெளியாவதற்கு முன்பு நான் எடுத்த முடிவுகள்.

விழா மேடையில் விஷ்ணு விஷால் கண் கலங்கியது தொடர்பான காணொலி

என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், என் நண்பன் ஒருவன் என்னுடன் இருந்தான். அவன் இஸ்லாமியர் என நான் என்றுமே பார்த்ததில்லை.

இங்கு அவர்களை வைத்து நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. அவற்றை எல்லாம் ஒரு படம் மூலமாக மக்களிடம் கொண்டு செல்ல, இந்தப் படம் மூலமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

எஃப்.ஐ.ஆர் பார்த்த தனுஷ்

என் வாழ்க்கையில் நிறைய விஷங்கள் நடந்தன. அதனால் நான் என் தயாரிப்பு நிறுவனத்திற்கு 1 வருடத்திற்கும் மேல் செல்லவே இல்லை. அப்போதுதான் இந்தப் படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன். தனுஷ் இந்தப் படத்தை பார்த்து விட்டார்.

ராட்சசன் விஷ்ணு விஷாலுக்கும், எஃப்.ஐ.ஆர் விஷ்ணு விஷாலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

அவ்வளவு பெரிய நடிகர் என்னை வாழ்த்தியது, எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் அண்ணா எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லியுள்ளார்.

நல்ல படம் எடுத்தால், நீ பெரிய ஹீரோ ஆக முடியும் எனக் கூறினார். அவரை 'அண்ணா' என அழைப்பதா? அல்லது 'சார்' என அழைப்பதா? எனத் தெரியவில்லை” என்றார்.

எஃப்.ஐ.ஆர் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க:வெளியானது மகான் ட்ரெய்லர்: பிப். 10 அன்று நேரடியாக ஒடிடியில்...

ABOUT THE AUTHOR

...view details