நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா இருவருமே நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தங்களது காதலை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.
இருப்பினும் திருமணம் குறித்து மவுனம் காத்து வந்த விஷ்ணு விஷால், 'காடன்' படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் நேற்று (ஏப்ரல் 22) காலை ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் இருவர்களின் நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.