தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘வீரமே வாகை சூடும்’ டப்பிங் பணி தொடக்கம்! - Vishals next movie dubbing start

விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

வீரமே வாகை சூடும் டப்பிங் தொடக்கம்
வீரமே வாகை சூடும் டப்பிங் தொடக்கம்

By

Published : Sep 6, 2021, 4:35 PM IST

சென்னை: 'எனிமி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது 31ஆவது படத்தில் நடித்துவருகிறார். புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாள்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இதில் டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விஷால் ஃபிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது,

வீரமே வாகை சூடும்
அதன்படி படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கின. விஷால் தற்போது ‘எனிமி’ படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்பு அவர் இதில் கலந்துகொள்வார் என தெரிகிறது.
வீரமே வாகை சூடும் டப்பிங் தொடக்கம்

இதையும் படிங்க:அஷ்வமித்ரா: புதிய பாதையில் ஹரிஷ் உத்தமன்

ABOUT THE AUTHOR

...view details