சமீபத்தில் விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற படம் வெளியானது. தற்போது விஷால், வினோத் குமார் இயக்கத்தில் 'லத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது, கையில் ஏற்பட்ட காயத்திற்காக கேரளா சென்று சிகிச்சை முடிந்து சமீபத்தில் சென்னை திரும்பினார், விஷால். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'மார்க் ஆண்டனி' யாக விஷால்
இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையைக் கேட்டு பிடித்துப்போன விஷால் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று தலைப்பு வைக்கப்பட்டு, பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதாகவும் செய்தி பரவியது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படமும் வெளியானது.
விஷால்-33 படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் அப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 'எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்க இருந்தது.