ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்து வரும் படம் ’எனிமி’. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் கருணாகரன், மிருணாளினி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ’எனிமி’! - விஷால் ஆர்யா எனிமி படம்
விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
![இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ’எனிமி’! vishal arya latest movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11200147-thumbnail-3x2-cine.jpg)
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் எனிமி
இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒருமாதமாக வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ராணா, விஷ்ணு விஷால் பாராட்டைப் பெற்ற அறிமுக ஒளிப்பதிவாளர்