தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஷாலின் சக்ரா பட டிரைலர் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம் - விஷாலின் சக்ரா பட டிரைலர் வெளியீடு

நடிகர் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் இந்தி டிரைலர் வெளியாகிள்ளது.

chakra
chakra

By

Published : Feb 13, 2021, 10:41 PM IST

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் சக்ரா. இப்படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோபோ சங்கர், ரெஜினா, மனோபாலா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் வருகின்ற 19ஆம் தேதி ரிலீசாகும் என விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழில் வெளியாகும் இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சக்ரா படத்தின் இந்தி டிரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சைபர் கிரைமை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள சக்ரா படத்தின் டிரைலர் ஆக்சன் கலந்த விறுவிறுப்புடன் வெளியாகியுள்ளது.

விஷாலின் சக்ரா பட டிரைலர் வெளியீடு

விஷாலின் முதல் இந்தி டப்பிங் படம் இது என்பதால் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. பாடலை பாடகி சின்மயி, பிரார்த்தனா இந்திரஜித் ஆகியோர் பாடியுள்ளனர்.

இதையும் படிங்க:பாலு மகேந்திரா - கண்களில் காடு வைத்திருந்தவர்...

ABOUT THE AUTHOR

...view details