விஷால் ஃபிலிம் ஃபாக்டரி சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் திரைப்படம் 'சக்ரா' . விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், சிருஷ்டி டாங்கே, கே.ஆர். விஜயா, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திருந்தது. தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'இந்தியன் 2' விபத்து: காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய 'சக்ரா' குழுவினர் பிரார்த்தனை! - சக்ரா படப்பிடிப்பு
'இந்தியன் 2' படப்பிடிப்பில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய 'சக்ரா' படக்குழுவினர் பிரத்தனை செய்தனர்.
vishal
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கிரேண் அறுந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'சக்ரா' படக்குழுவினர் படப்பிடிப்பு தொடங்கும் முன் சில நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். படுகாயமடைந்தவர் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்து ஆரம்பித்துள்ளனர். இதில் நடிகர் விஷால் கலந்துகொண்டார்.