பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு, அசத்தலான அதிரடி காட்சிகள் என முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கும் படம் 'ஆக்ஷன்'. விஷால் - தமன்னா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா பூரி, சாயா சிங், கபீர் சிங், ராம்கி, யோகி பாபு, பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.