பெங்களூரு: கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நேற்று முன் தினம் (அக்.29) திடீர் மாரடைப்பால் காலமானார்.
புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக திகழந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டுவந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1,800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.