தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஷாலின் சக்ரா ரிலீஸ் தேதி அறிவிப்பு! - vishal starrer chakra release date announced

விஷால் நடித்துள்ள 'சக்ரா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷாலின் சக்ரா ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஷாலின் சக்ரா ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Published : Jan 31, 2021, 4:52 PM IST

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'சக்ரா'. ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா, மனோபாலா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா தொற்று காரணமாக வெளிவராமல் இருந்தது. இதனிடையே ஓடிடியில் வெளியாகவும் பேச்சுவார்த்தை நடந்தது.

அண்மையில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றதால் சக்ரா படத்தை திரையரங்குகளில் வெளியிட விஷால் முடிவு செய்தார். அதன்படி 'சக்ரா' படம் பிப்ரவரி 19ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படப்பிடிப்பு நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details