சென்னை: புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவச மளிகை பொருள்களை வீட்டுக்கு வந்து கொடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றிய தகவலை நடிகர் விஷால் பகிர்ந்துள்ளார். நடிகர் விஷால் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:
புற்று நோயாளிகளுக்கு இலவச மளிகை பொருள்கள் - விஷால் பகிர்வு - புற்று நோயாளிகளுக்கு இலவச மளிகை பொருள்கள்
கரோனா தொற்றால் சிரமத்துக்கு ஆளாகி வரும் புற்று நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்திருப்பது பற்றி விஷால் குறிப்பிட்டுள்ளார்.
![புற்று நோயாளிகளுக்கு இலவச மளிகை பொருள்கள் - விஷால் பகிர்வு Free provisions from NGO](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7186352-1071-7186352-1589382833985.jpg)
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், இலவச மளிகை பொருள்கள் #sankalpBeatifulWorld என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிக்கொண்டிருக்கிறது. +91 78258 88000 என்ற எண்ணுக்கு அழைத்தால் மளிகைப் பொருள்கள் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்துதருவார்கள். இந்தப் பதிவை பகிர்ந்து, தவித்துவரும் புற்று நோயிகளுக்கு உதவிடுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய விஷால் ரசிகர் மன்றம்!