தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெயரை கெடுக்க விரும்பவில்லை - மிஷ்கினை சாடிய விஷால் - விஷால் பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஷாலுக்கு மிஷ்கின் விதித்த நிபந்தனைக்கு கடுமையாக சாடி விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Thupparivaalan
Thupparivaalan

By

Published : Mar 11, 2020, 3:40 PM IST

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'துப்பறிவாளன்'. இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம், 'துப்பறிவாளன் 2' என்னும் பெயரில் உருவாகிவருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது.

அதன் பின் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இப்படத்திலிருந்து வெளியேறினார். இதனால் விஷாலே இப்படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (மார்ச் 11) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது விஷாலுக்கு மிஷ்கின் அளித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்று சமூகவலைதளத்தில் உலா வருகிறது. இந்த கடிதத்தால் திரைத்துறையினரிடம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

  • இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
  • கனடா, இங்கிலாந்தில் கதை எழுத விரும்பிய ஒரு இயக்குநர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் ரூபாய் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை .
  • படத்தின் தயாரிப்பின்போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா? UK-வில் 3 முதல் 4 மணிநேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய்வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.
  • ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்கு பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை.
  • நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்தக் குழந்தையை அனாதை இல்லத்தில் கைவிடுவதுபோல மோசமாக இருக்கிறது.
  • இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் VFF அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்கு சரியானதா?
  • திரைப்படத் தயாரிப்பின்போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?
  • நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுக தயாரிப்பாளரோ, அறிமுக தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக்கூடாது என்பதற்காகத்தான்.
  • மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்ல வேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கி சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதிசெய்கிறேன்.
  • இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளரும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2' படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.
  • இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்.
  • இன்று மாலை ஆறு மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க: விஷாலிடம் 40 இல்ல 400 கோடி கேட்டேன் - இயக்குநர் மிஷ்கின்

ABOUT THE AUTHOR

...view details