தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'லத்தி' இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - vishal 32 movie

விஷால் நடிப்பில் உருவாகிவரும் 'லத்தி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஷால்
விஷால்

By

Published : Dec 13, 2021, 2:12 PM IST

நடிகர்கள் ஆர்யா, விஷால் நடித்துள்ள படம் 'எனிமி'. ஆனந்த் ஷங்கர் இயக்கிய இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் வினோத் குமார் இயக்கிவரும் 'லத்தி' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஷாலுடன் இணைந்து சுனைனா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க:'நீங்க இல்லாம நான் இல்ல' - நடிகர் சிம்பு உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details