நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
நடிகர் விஷால் சினிமாவில் நடித்துக்கொண்டே தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்.
ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால் தேவி அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவ, மாணவியர்கள் படிப்பு குறித்த யோசனை, சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் மத்தியில் விஷால் பேசுகையில், 'நீங்கள் அனைவரும் என் படத்தை டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கிறீர்கள். நான் சம்பாதிக்கும் பணத்தில் என் தாய் தந்தையரை கவனித்துக் கொண்டாலும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துக் கொண்டே இருக்கும்.
தமிழ் சினிமாவில் என்னை ஒரு ஹீரோவாக வைத்து அழகு பார்ப்பவர்கள் நீங்கள். உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் என்னால் முடிந்த கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறேன். சமூக சேவை என்பது யோசித்து செய்யும் விஷயம் அல்ல.
நீங்கள் அனைவரும் நல்ல முறையில் படித்து ஒரு டாக்டராகவோ இன்ஜினியராகவோ உருவாகுவதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தேவி அறக்கட்டளை மூலம் என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
இந்த கலந்து ஆலோசனையில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் பேசுகையில், ' உங்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறோம். கஷ்டமான சூழ்நிலையில் நாங்கள் இருந்தபோது யாரும் எங்களுக்கு உதவவில்லை. உங்களை நம்பி வந்த நாங்கள் இப்போது நன்றாகப் படித்து வருகிறோம். இந்த நம்பிக்கை எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் கொடுத்துள்ளது. இத்தனை ஆண்டுகள் உங்கள் உதவியால் படித்து வருகிறோம். உங்கள் பெயரை நாங்கள் காப்பாற்றுவோம்’ என்றார்.
இதையும் வாசிங்க: Jim Carrey 58 - மக்களின் சிரிப்பை விருதாகக் கருதும் மகத்தான கலைஞன்