தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேற்படிப்பு படிக்க மாணவர்களுக்கு கை கொடுக்கும் விஷால் - பிளஸ்டூ மாணவர்களுக்கு உதவி

பிளஸ்டூ வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மேற்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்களு உதவும் வகையில் நடிகர் விஷால் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மேற்படிப்பு படிக்க மாணவர்களுக்கு கை கொடுக்கும் விஷால்

By

Published : Apr 21, 2019, 3:57 PM IST

நடிப்பு, தயாரிப்பு, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என மிகவும் பரபரப்பாக இருக்கிறார் நடிகர் விஷால். திரைத்துறை, சங்கப்பணி பரபரப்புக்கு இடையில், தன்னுடைய பிறந்தநாளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். தற்போது +2 முடித்த மாணவ மாணவர்களுக்காக ஒரு அறிவிப்பினை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதாவது, பிளஸ்டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து மேற்படிப்பு படிக்க வசதி இல்லாதவர்களுக்கு கரம் கொடுக்க விஷால் முடிவெடுத்துள்ளார்.

தன்னுடைய அம்மா பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேவி அறக்கட்டளை மூலம், இந்த உதவியைச் செய்ய உள்ளார். பிளஸ்டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, மேற்படிப்பு படிக்க முடியாமல் தவிக்கும் மாணவ மாணவிகள் நிதியுதவிக்காக, தேவி அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கான தொலைபேசி எண்ணான 971044442, இணையதள முகவரியான devifoundationchennai@gmail.com உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

விஷால் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் அயோக்யா படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details