அயோக்யா படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விஷாலுக்கு இப்படி ஒரு நிலைமையா... ஐய்யோ பாவம் - சுந்தர்.சி
சுந்தர்.சி படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இப்படத்திற்கான படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது விஷாலுக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில் எப்படி விஷாலுக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்து படக்குழுவினர் தெளிவுபடுத்தவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா அல்லது இந்தியா திரும்புகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.