நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது உடலைப் பேணிக்காப்பதில் அக்கறை கொண்டவர். நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் இவர், தனது 82ஆவது வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறார்.
யூ-ட்யூப் சேனல் தொடங்கிய விஷாலின் தந்தை! - விஷால் தந்தை ஜிகே ரேட்டி
நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரேட்டி தனது பெயரில் புதிதாக யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

gk
உடற்பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் தன்னால் 82 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது என்று கூறும் இவர், இதை அனைவரும் உணர்வதற்காக புதிதாக யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தனது பெயரிலே ஆரம்பித்துள்ளார்.
அதில், ”உடற்பயிற்சி மேற்கொள்வது எப்படி? உடல் பருமன் ஏற்படாமல் கடைபிடிப்பது எப்படி?” போன்ற டிப்ஸ்களை சொல்வது மட்டுமின்றி, அவரே உடற்பயிற்சி செய்தும் காணொலிகளில் விளக்குகிறார். இந்த யூ-ட்யூப் சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.