ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பிரதிக் பாப்பர், யோகி பாபு, ஜீவா, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ’தர்பார்’ பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் விஷால்! - விஷால்
ரஜினியின் ‘தர்பார்’ படம் வெளியாகும் நாளன்று விஷாலின் புதிய படம் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
rajini vs vishal
எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இது விஷாலின் 28ஆவது படமாகும். அதேபோல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்துவரும் படமும் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.