நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' திரைப்படம் பிப்ரவரி 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு படத்திற்கு விளம்பரம் சேர்க்கும் வகையில், சக்ரா படத்தின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த புரொமோவில், மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஏடிஎம் வாட்ச்மேனை அடிக்கும் ஒருவரிடம் விஷால் பேசுவதுபோன்ற காட்சி வருகிறது. அந்த நபரை தினசரி நாளிதழை எடுத்து படிக்க சொல்கிறார். அவரும் படிக்கிறார் அதில் இந்தியர்களால் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட 900 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை மீட்போம் என பாரத பிரதமர் உறுதி; வங்கிக் கடனை அரசு ரத்து செய்யாததால், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை; புதிய சாலை திட்டத்துக்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு; சொந்த நிலங்களில் இருந்து மக்கள் விரட்டியடிப்பு போன்ற செய்திகளை படிக்கிறார் அந்த நபர்.
மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் விஷால் - அனல் பறக்கும் சக்ரா பட வசனங்கள்!
விஷால் நடித்துள்ள சக்ரா படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்னீக் பீக் காட்சி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து உனக்கு உண்மையில் தைரியம் இருந்தால், இந்த வயதான பெரியவரிடம் காட்டிய அதே கோபத்தையும், வீரத்தையும் இதுல இருக்கிற ஏதாவது ஒரு விஷயத்துல காட்ட முடியுமாடா, துணிச்சல் இருக்கிறதா அதனை தட்டிக்கூட கேட்க வேண்டாம். ஆனால், அனைவருக்கும் கேட்கும்படி, உன்னால் ஒரு கேள்வி மட்டும் கேட்க முடியுமா முடியாது. ஏன்னா திருப்பி அடிப்பாங்க. நம்ம எங்க வீரத்தை காட்டுவோம். அப்பாவி மக்களிடம் தான் என்று அனல் பறக்கும் வசனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
மறைமுகமாகவும், நேரடியாகவும் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் இருக்கும் சக்ரா படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் படத்தில் இந்த காட்சி வருமா அல்லது நீக்கப்படுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.