தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்ல பிராணிக்காக வித்தியாசமான வீடியோ வெளியிட்ட விஷால் - விஷால் படங்கள்

நடிகர் விஷால் தனது செல்ல பிராணியின் பிறந்தநாளை முன்னிட்டு வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஷால்
விஷால்

By

Published : Jul 30, 2021, 8:03 PM IST

திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது செல்ல பிராணிகளின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

ஒருசிலரோ ஒருபடி மேலே சென்று செல்ல பிராணிகளுக்குப் பல ஆயிரம் செலவு செய்து, பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விஷால் தனது செல்ல பிராணியான நாய் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மனிதர் அணியும் சட்டையை அமர்ந்து செல்ல பிராணி ஆகஸ்ட் அமர்ந்திருக்கிறது.

பின்னால் இருந்து இரண்டு கைகள் பிஸ்கட் உண்பது போல் உள்ளது. இறுதியாக விஷால் மேஜிக் நடத்திய மகிழ்ச்சியில் எழுந்து சிரிக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு மகனே என குறிப்பிட்டு விஷால் வெளியிட்டுள்ள வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:viral video: பலூன் கேட்ச் - சமந்தாவுடன் சமத்தாக விளையாடும் நாய்..

ABOUT THE AUTHOR

...view details