நடிகர் விஷால் இன்று (ஆகஸ்ட் 29) தனது 44ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் காலை முதல் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆதரவற்றோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்! - vishal birthday special
நடிகர் விஷால் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
விஷால்
இந்நிலையில் நடிகர் விஷால் சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள சுரபி இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக்வெட்டி, உணவு அருந்தி கொண்டாடினார். அதேபோல் கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சீனு, தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா, மக்கள் நல இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.