தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த "டெம்பர்" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமிக்காக 'அயோக்யா' திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
அதிரடியாக களம் இறங்கிய விஷால்-பார்த்திபன்: 'அயோக்யா' டீஸர் வெளியீடு! - ஏ ஆர் முருகதாஸ்
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. 'அயோக்யா' படத்தின் டீஸரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை, தியேட்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.