விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படத்தின் இயக்கத்திற்குப் பிறகு ஆனந்த் ஷங்கர் தற்போது விஷால்-ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார். விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. தமிழில் வெளியான 'லென்ஸ்', 'வெள்ளை யானை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகும் 'நோட்டா' இயக்குநரின் 'எனிமி' - விஷால் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திற்கு 'எனிமி' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
enemy
தற்போது இந்தப் படத்திற்கு 'எனிமி' எனத் தலைப்பு வைத்து போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் விஷால்-ஆர்யாவுடன் மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பாலாவின் அவன்-இவன் படத்திற்கு பின் விஷாலும் ஆர்யாவும் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.