தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தீபாவளி ரேஸில் இணைந்த 'எனிமி' - எனிமி திரைப்படம்

ஆர்யா, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எனிமி' படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

enemy
enemy

By

Published : Oct 1, 2021, 6:05 PM IST

ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி, மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இதில் ஆர்யாவும், விஷாலும் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார். 'எனிமி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே வெளியாகியுள்ள எனிமி படத்தின் டீஸர், பாடல்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதலில் 'எனிமி' திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே 'அண்ணாத்த', 'மாநாடு', 'மகான்' படங்கள் தீபாவளி ரேஸில் உள்ள நிலையில், இப்போது 'எனிமி'யும் இணைந்துள்ளது.

இதையும் படிங்க: உலகத்திலேயே ஆபத்தான 'எனிமி' எல்லாம் தெரிந்த நண்பன்: வெளியான டீசர்!

ABOUT THE AUTHOR

...view details