'எனிமி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது 31ஆவது படத்தில் நடித்துவருகிறார். புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 50 நாள்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.
டிம்பிள் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விஷால் ஃபிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரிக்கிறது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வீரமே வாகை சூடும் இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக விஷால் பைக்கில் அமர்ந்திருக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே விஷால், ஆர்யா நடித்த எனிமி படம் தீபாவளியன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.