தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

4ஆவது முறையாக விஷாலுடன் கூட்டணி போட்ட யோகி பாபு

சென்னை: விஷாலின் 31ஆவது படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Jun 23, 2021, 2:00 PM IST

யோகி பாபு
யோகி பாபு

நடிகர் விஷாலின் 31ஆவது திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கிவருகிறார். பிரமாண்ட பொருள்செலவில் உருவாகும் இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துவருகிறது

தற்காலிகமாக 'விஷால் 31' என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இதில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஷாலும்-யோகி பாபுவும் இணைந்து 'அயோக்யா', 'யானை', 'ஆக்‌ஷன்' ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மாநாடு' பட டப்பிங் பணியில் கல்யாணி

ABOUT THE AUTHOR

...view details