நடிகர் விஷாலின் 31ஆவது திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்காலிகமாக விஷால் 31 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விஷாலின் 31ஆவது திரைப்படம் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.