நடிகர் விஷாலின் 31ஆவது திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 50 நாள்கள் நடைபெற்றது. இப்படத்தில் நாயகியாக டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பிறந்தநாள் ட்ரீட்டாக அப்டேட்... ரசிகர்களை உற்சாகமூட்டும் விஷால்! - விஷால் 31 படம்
நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் 31ஆவது படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஷாலின் 31ஆவது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஆகஸ்ட்.29) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் இந்த டைட்டில் மற்றும் போஸ்டர், அவரது ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியின்போது, விஷாலுக்குக் காயம் ஏற்பட்ட நிலையில், பிசியோதெரபி மருத்துவர் கொடுத்த சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.