நடிகர் விஷால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'அயோக்கியா' படத்திற்கு பெண்கள் மற்றும் விஷால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
திரையரங்கில் கேக் வெட்டி 'அன்னையர் தினம்' கொண்டாடிய விஷால் ரசிகர்கள்! - vishal fans
சேலம்: சேலத்தில் 'அயோக்கியா' படம் வெளியான திரையரங்கில் கேக் வெட்டி அன்னையர் தினத்தை விஷால் ரசிகர்கள் நேற்று கொண்டாடினர்.
அன்னையருக்காக திரையரங்கங்கில் கேக் வெட்டி கொண்டாடிய விஷால் ரசிகர்கள்
இந்த நிலையில், நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாநகர தலைமை புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் திரையரங்கிலேயே கேக் வெட்டி கொண்டாடினர்.
இதில், திரையரங்க உரிமையாளர் குரு சாந்தகுமார், சேலம் மாவட்ட விஷால் ரசிகர் மன்ற தலைவர் சாமிதுரை, மாவட்ட பொருளாளர் சூர்யா, மாநகர தலைவர் கெளதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.