நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான படம் 'ஜீரோ'. இந்த படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகியும் புதுப்படங்களில் கமிட் ஆகாமல் கணவர் விராட் கோலியுடன் நேரம் செலவழித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கருத்துகளையும், புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் விவாத பெருளாகி வருகிறார்.
அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிக லைக்ஸ் வாங்கி வருகிறது. அப்புகைப்படத்தில் அனுஷ்கா கடற்கரையோரம் பிகினி உடையில் இருக்கிறார். இப்புகைப்படம் அவர் பதிவேற்றிய சில மணிநேரங்களிலேயே பல லட்சம் லைக்ஸ்களை அள்ளியது. பலரும் வாவ், க்யூட், அழகு என்று கமெண்ட் செய்துள்ளனர்.
ஆனால் இதில் ஆச்சர்யம் என்னெவன்றால் இப்புகைப்படத்திற்கு விராட் கோலி ஹார்டின் வடிவ எமோஜியை பதிவிட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். விராட்டின் இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது இந்த கமெண்டையும் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.