தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைரல் வீடியோ: டாப் டக்கர் பாடலுக்கு நடனமாடிய பாட்டி - வைரல் வீடியோ

டாப் டக்கர் பாடலுக்கு பாட்டியும் பேரனும் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வைரல் வீடியோ: டாப் டக்கர் பாடலுக்கு நடமாடிய பாட்டி பேரன்!
வைரல் வீடியோ: டாப் டக்கர் பாடலுக்கு நடமாடிய பாட்டி பேரன்!

By

Published : Feb 26, 2021, 11:53 AM IST

பிரபல ராப் பாடகரான பாட்ஷா, இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, உஜானா அமித், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து 'டாப் டக்கர்' எனும் ஒரு இசை பாடலை உருவாக்கியுள்ளனர்.

இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பாட்ஷா, உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்.

இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தியும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் யூடியூப் தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

வைரல் வீடியோ: டாப் டக்கர் பாடலுக்கு நடமாடிய பாட்டி பேரன்!

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அக்‌ஷய் பார்த்தசாரதி என்பவர் தன்னுடைய பாட்டியுடன் டாப் டக்கர் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராப் பாடகரான பாட்ஷா பகிர்ந்துள்ளார். அதில், “பாட்டி நீங்கள்தான் என்னோட டாப் டக்கர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'வாத்தி கம்மிங்'- யூ-டியூபில் இரண்டே மாதத்தில் சாதனை படைத்த விஜய் பாடல்!

ABOUT THE AUTHOR

...view details