விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா டேட்டிங் செய்துவருவதாகச் சமூக வலைதளங்களில் பல நாள்களாகப் பேசப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வாக ஒருமுறைகூட தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் 2022ஆம் புத்தாண்டையை விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி இணைந்து கோவாவில் கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.
முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா, "திரைத் துறையில் நான் மிகவும் நம்பும் நபர் என்றால் அது விஜய் தேவரகொண்டாதான். எனக்கு நிறைய ஆலோசனை வழங்குவார். ஆனால் எனக்குத் தேவையான ஒன்றை மட்டுமே நான் எடுத்துக் கொள்வேன்" என்றார்.
இதையும் படிங்க:Vikram Vedha Remake - ஹிருத்திக் ரோஷன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு