இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா, சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் களவாணி. இப்படம் கடந்த 2010 ஜூன் 25 ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தின் மூலம் விமல் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராகவும் வலம் வந்தார். காதல் நகைச்சுவை கலந்த படமாகவும் கிராமத்தில் நடக்கும் யதார்த்தங்களை பதிவு செய்தது. இப்படத்தில் நாயகியாக நடித்த ஓவியா தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாக இடம்பிடித்துள்ளார்.
இப்படம் வெளிவந்து 9 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தற்போது, அதே கூட்டணியில் உருவாகியுள்ள களவாணி -2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் காதல், இரண்டாவது பார்ட்டில் நகைச்சுவை கலந்து அரசியலை மையப்படுத்தி இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஓவியா, சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு, ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.