இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வெண்ணிலா கபடிக்குழு'. 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் கிராமத்தில் வாழும் பல லட்ச இளைஞர்களின் கனவுகளாக பிரதிபலித்தது. கபடியை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் எல்லா தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து மகத்தான வெற்றியை பெற்றது. அலட்டிக்கொள்ளாத வசனங்கள், மெல்லிய காதல் காட்சிகள், கபடிக்காக இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, விளையாட்டில் சாதியம் உள்ளிட்டவற்றை மிக எதார்த்தமாக சுசீந்திரன் பதிவு செய்திருந்தார்.
'கபடி கத்துக்க தமிழன் என்கிற தகுதி போதாதா..?' - 'வெண்ணிலா கபடிக்குழு -2' டிரெய்லர் ரிலீஸ்! - பசுபதி
சுசீந்திரனின் மூலக்கதையில் உருவாகியுள்ள 'வெண்ணிலா கபடிக்குழு 2' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
!['கபடி கத்துக்க தமிழன் என்கிற தகுதி போதாதா..?' - 'வெண்ணிலா கபடிக்குழு -2' டிரெய்லர் ரிலீஸ்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3766077-thumbnail-3x2-susi.jpg)
இப்படம் விஷ்ணு விஷால், சூரி, அப்புகுட்டி ஆகியோருக்கு சிறந்த அறிமுகத்தையும் கொடுத்தது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஒன்பது வருடங்களை கடந்துவிட்ட நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகத்தை இயக்கிய சுசீந்திரனின் மூலக்கதையில், அவரது உதவியாளர் செல்வசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு நாயகியாக அர்த்தனா நடித்துள்ளார். அப்புக்குட்டி, சூரி, கிஷோர், பசுபதி, ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசரை தொடர்ந்து தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. அதே கபடி களம்... கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர். ஒரு தந்தையின் கனவை மகன் நிஜமாக்கும் கதையாக 'வெண்ணிலா கபடிக்குழு 2' மதுரை பின்னணியில் உருவாகியுள்ளது. வெற்றிக்காக போராடும் இளைஞனாக துடிப்புடன் விக்ராந்த் நடிக்கிறார். தோல்விகளை சந்தித்து வரும் விக்ராந்த் இப்படம் தனித்த அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.