தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விக்ரமின் புதிய படத்துக்கு மிரட்டலான தலைப்பு! - விக்ரம்58 மோஷன் போஸ்டர் கோப்ரா

கேட்சியான தலைப்புகளை தொடர்ந்து தனது படங்களுக்கு தேர்வு செய்துவரும் விக்ரம், தனது புதிய படத்துக்கு புதுமையான தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.

Vikram new movie titled Cobra
Actor vikram

By

Published : Dec 25, 2019, 8:21 PM IST

சென்னை: விக்ரம் - அஜய் ஞானமுத்து படத்தின் தலைப்பை மோஷன் போஸ்டராக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ’கோப்ரா’ என படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மிரட்டலான பின்னணி இசையுடன் கூடிய மோஷன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து விக்ரம் படத்தின் ’கோப்ரா’ தலைப்பு சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது. திரில்லர் பாணியில் உருவாகும் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் 2020 கோடையில் திரைக்கு வரவுள்ளது.

சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த விக்ரம், தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடிப்பதுபோல், அந்தப் படத்துக்கு கேட்சியான தலைப்புகளையும் வைத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவுக்கு புதுமையாக திகழும் விதமாக கோப்ரா என்ற வித்தியாச தலைப்பை தனது புதிய படத்துக்கு வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details