விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம், 'விக்ரம் வேதா'.
'புஷ்கர் - காயத்ரி இயக்கிய இப்படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
தமிழைத் தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் இன்று (அக்.15) விஜய தசமியை முன்னிட்டு ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியது. புஷ்கர் - காயத்ரி இயக்கிவரும் இதில் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கின்றனர்.
இந்தியிலும் 'விக்ரம் வேதா' என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க:அரசை எதிர்க்கும் சூர்யா.... மாஸாக வெளியான ஜெய் பீம் டீஸர்