சென்னை: கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, வாகா, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
விக்ரம் பிரபுவிற்கு ஒளியாகிய வாணி போஜன் - actor vikram prabu
விக்ரம் பிரப நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு பாயும் ஒளி நீ எனக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
![விக்ரம் பிரபுவிற்கு ஒளியாகிய வாணி போஜன் Vikram prabhu new film paayum Oli Nee Enakku announcement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9306673-1010-9306673-1603618152054.jpg)
இந்நிலையில், அவர் புதியதாக நடக்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு "பாயும் ஒளி நீ எனக்கு" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். வாணி போஜன், கன்னட நடிகர் தனன்ஜெயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இத்திரைப்படத்தின் மூலம் மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.