தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விக்ரம் பிரபு - துல்கர் சல்மான் இணையும் ஆக்‌ஷன் - த்ரில்லர்! - இயக்குநர் ஜேடி-ஜெர்ரி

அக்னி நட்சத்திரம், உல்லாசம், நேருக்கு நேர் பாணியில் விக்ரம் பிரபு - துல்கர் சல்மான் இணைந்து நடிக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படம் உருவாகவுள்ளது.

விக்ரம் பிரபு - துல்கர் சல்மான்

By

Published : Oct 25, 2019, 1:41 AM IST


ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ஒன்றில் நடிகர்கள் விக்ரம் பிரபு, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.


தமிழில் விக்ரம் பிரபுவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் வளர்ந்து வரும் நடிகர்களாக உள்ளனர். தங்களுக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து இருவரும் நடித்து வரும் நிலையில், ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இவர்கள் இணையும் படத்தை பிரபல இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்கவுள்ளனராம். படத்துக்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கி வரும் ஜேடி-ஜெர்ரி, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரை வைத்து புதிய படத்தை இயக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தப் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தற்போது விக்ரம் பிரபு - துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளனர். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் - விக்ரம் நடிப்பில் வெளியாகிய உல்லாசம் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details