தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விக்ரம் வீட்டிலிருந்து 'பப்ஜி' விளையாட களமிறங்கும் மற்றொரு நட்சத்திரம் - நடிகை ஐஸ்வர்யா தத்தா புதிய படம்

நடிகை ஐஸ்வர்யா தத்தா, 'பிக் பாஸ் புகழ் ஜூலி இணைந்து நடிக்கும் படத்தில் நடிகர் விக்ரமின் மருமகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

actor vikram Nephew Arjuman

By

Published : Aug 22, 2019, 8:21 PM IST

Updated : Aug 23, 2019, 8:01 AM IST

காமெடி, த்ரில்லர் பாணியில் தயாராகும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' படம் மூலம் கோலிவுட்டில் களமிறங்குகிறார் நடிகர் அர்ஜுமன்.

'தாதா தாதா 87' படத்துக்கு பிறகு இயக்குநர் விஜய் ஸ்ரீ 'ப்பஜி' என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' படத்தை இயக்கி வருகிறார். ஐந்து ஹீரோயின்கள் நடிக்கும் இப்படத்தில் தற்போது ஐஸ்வர்யா தத்தா, 'பிக் பாஸ்' ஜூலி ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'நான் கடவுள்' ராஜேந்திரன் குற்றப் பிரிவு உயர் அலுவலராக நடிக்கிறார்.

இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன் 'பப்ஜி' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் மூலம் விக்ரம் வீட்டிலிருந்து மற்றொரு நட்சத்திரம் கோலிவுட்டில் களமிறங்குகிறது.

பப்ஜி விளையாட்டுக்குள் புகுந்த நட்சத்திரம்

நடனம், தற்காப்பு கலை ஆகியவற்றை முறையாகக் கற்றுக்கொண்டுள்ள அர்ஜூமன் நடிப்பு மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சினிமாவில் களமிறங்குகிறாராம். விரைவில் இவரை முறையாக அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி

ஏற்கனேவே விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள 'ஆதித்யா வர்மா' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து விக்ரமின் மருமகனும் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார்.

கடந்த வாரம் ஐஸ்வர்யா தத்தா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோரின் புகைப்படங்களோடு பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

பப்ஜி பட போஸ்டர்

இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'பப்ஜி' கேம் போன்றதொரு விளையாட்டை ஐந்து பேர் விளையாடுகின்றனர். அப்போது அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Last Updated : Aug 23, 2019, 8:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details