'மாஸ்டர்' திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இது கமல்ஹாசனின் 232ஆவது படமாகும்.
இப்படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் இதை தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படப்பிடிப்பு ஆரம்ப வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரும் மாஸான லுக்கில் இருந்தனர்.