தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கன் ஷாட்டுடன் நிறைவடைந்த விக்ரம் படப்பிடிப்பு - விக்ரம் திரைப்படம்

கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

vikram movie shooting  vikram movie  kamal vikram movie  kamal latest movie  Lokesh Kanagaraj latest movie  விக்ரம் படப்பிடிப்பு  கமலின் விக்ரம் திரைப்படம்  கமல் நடிக்கும் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு  விக்ரம் திரைப்படம்  லோகேஷ் கனகராஜ்
விக்ரம் திரைப்படம்

By

Published : Mar 2, 2022, 11:14 AM IST

சென்னை:விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அனிருத் இந்தப் படத்திற்குஇசையமைக்கிறார்.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வருடம் ஜூலையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் (மார்ச் 1) முடிவடைந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு கமல் இப்படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்தார். அதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்நிலையில் நேற்று (மார்ச் 1) விக்ரம் படத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

இது குறித்து இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ இன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் பஹத் பாசில் கையில் துப்பாக்கியுடன் சுட, மற்ற படக்குழுவினர் ஆரவாரத்துடன் படப்பிடிப்பு நிறைவைத் தெரிவித்துள்ளனர். மொத்தம் 110 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் தேதி...?

ABOUT THE AUTHOR

...view details