தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்: தொடரும் விருமாண்டி மீதான காதல்! - virumandi first look

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

vikram movie first look released
vikram movie first look released

By

Published : Jul 10, 2021, 5:43 PM IST

மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் ‘விக்ரம்’. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், ‘விக்ரம்’ என்ற கமலின் பழைய பட தலைப்பையே தேர்வு செய்திருந்தார். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘விருமாண்டி’ பட ஸ்டைலில் வெளியிட்டிருக்கிறார்.

கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மூவரும் முகத்தில் சிறு கீறலுடன் காணப்படுகின்றனர். ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

விருமாண்டி தனக்கு மிகவும் பிடித்த படமென லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இதனால் இந்த ஃபர்ஸ்ட் லுக் அதே ஸ்டைலில் திட்டமிட்டு வெளியிடப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க:மீண்டும் தீபிகா - சஞ்சய் லீலா காம்போ!

ABOUT THE AUTHOR

...view details