‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார். அதேபோல் சூர்யாவிடமும் வெற்றிமாறன் கதை சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரம், வெற்றிமாறனை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகனுக்காக வெற்றிமாறனை சந்தித்த விக்ரம்? - Vikram meets vetrimaran for his son's carrier
விக்ரம் தனது மகன் துருவ்காக இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. துருவின் திரைப்பயணம் சரியாக அமைய வேண்டும் என்பதில் அவரது தந்தை விக்ரம் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். எனவே தன்னையும் தனது மகனையும் வைத்து படம் இயக்க முடியுமா என வெற்றிமாறனை அணுகி விக்ரம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் முகேஷ் ரதிலால் மெஹ்தா, விக்ரம் மற்றும் துருவ் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளேன் என, விழா மேடை ஒன்றில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அந்தத் திரைப்படம் குறித்துதான் வெற்றிமாறனிடம் விக்ரம் பேசியதாக கோடம்பாக்க வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.