தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பா. ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்; விரைவில் சியான் 61 படப்பிடிப்பு - kollywood cinema latest news

சியான் 61 படத்தில் நடிகர் விக்ரமுடன், இயக்குநர் பா.ரஞ்சித் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து படம் குறித்து இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/02-December-2021/13799037_vikramm.jpeg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/02-December-2021/13799037_vikramm.jpeg

By

Published : Dec 2, 2021, 7:40 PM IST

அண்மையில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படமானது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு புகழை சேர்த்தது. பின்னர் நடிகர் விக்ரமுடன் இணைந்து அவர் பணியாற்றவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் 61ஆவது படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்காலிகமாக சியான் 61 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள சியான் 61 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. விக்ரமின் நடிப்பில் கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹான் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்து விரைவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'நாங்கள் இருவரும் சேர்ந்தால் வெற்றியே...'; யாரை சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்?

ABOUT THE AUTHOR

...view details