'மாஸ்டர்' திரைப்படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனை வைத்து 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் டப்பிங் உரிமையை கோல்டுமைன் டெலிபிலிம் நிறுவனம் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை அல்லாத அளவிற்கு சுமார் 40 கோடி ரூபாய்வரை டப்பிங் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் லோகேஷ் கனகராஜின் படங்கள் அனைத்தும் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதால்தான், விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை அதிக விலைக்கு விற்பனை ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க:கோபி நயினார் இயக்கத்தில்ஜெய்