‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் ‘கோப்ரா’. இதில் நடிகர் விக்ரம், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் டீசர் இன்று (ஜன. 09) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. அறிவித்தபடி ‘கோப்ரா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 47 நொடி உள்ள இந்த டீசர் பரபரப்புக்குக் குறைவு இல்லாமல் நகர்கிறது.